

தமிழ் சினிமாவுக்கு ஓர் ‘எந்திரன்’, தெலுங்கு சினிமாவுக்கு ஒரு ‘பாகுபலி’, கன்னடத்துக்கு ஒரு ‘கே.ஜி.எஃப்’ போல், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு படம் மலையாள சினிமாவுக்கு வாய்க்கவில்லையே என்கிற குறையை 2019இல் துடைத்துப் போட்ட படம் ‘லூசிஃபர்’.
முன்னணிக் கதாநாயகனாக பிஸியாக நடித்துக்கொண்டிருந்த பிருத்விராஜ் சுகுமாரன், திரை இயக்கத்தின் மீது தனக் கிருந்த பிரியத்தை வெளிப்படுத்திய படம். 15 நாள்களில் 150 கோடி வசூலித்த இந்தப் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, ‘சினிமா இயக்கம் என்பது உங்கள் கனவாக இருந்ததா?’ என்று கேட்கப்பட்டபோது பிருத்விராஜ் சொன்ன பதில்: “நானொரு ஆக்ஸிடெண்டல் டைரக்டர்!” நாயகன் என்பவன், தீய சக்தி களுக்கு எதிராகப் போர்தொடுக்கும் நல்ல சக்தியாக விளங்குவான் என்பது இன்றுவரை வணிக நாயக சினிமாவின் சட்டக இலக்கணம்.