

பொதுமக்களுக்காகவும் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் பொதுவெளியில் நிகழ்த்தப்படும் ‘தெருக்கூத்’திலிருந்து பெட்டி அரங்க முறைக்குத் தமிழ் நாடகம் அடியெடுத்து வைக்க, மராத்தி, பார்சி நாடகக் குழுக்களிடம் தாக்கம் பெற்ற தஞ்சை டி.ஆர்.கோவிந்தசாமி ராவ் முக்கியக் காரணமாக அமைந்தார்.
அவர், தனது நவீனப் பெட்டி அரங்க முறைக்கு, தமிழ்த் தெருக்கூத்து வடிவத்திலிருந்து சில அம்சங்களைச் சுவீகரித்துக்கொண்டவர். தெருக்கூத்து என்பது பெரும்பாலும் தரையில் ஆடப்படும் நிகழ்த்துக் கலை. தெருக்கூத்து ஆடப்படும் மூன்று பக்கமும் திறந்த வெளியாகவும் ஒரு பக்கம் மட்டும் வாத்தியக் குழுவினர் அமர்ந்து வாசிக்கும் இடமாகவும் இருக்கும்.