

செயற்கை நுண்ணறிவு மின்னணுக் கருவிகள் சார்ந்த கழிவுகளின் பெருக்கம் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுக்கும் என பேசல் ஆக் ஷன் நெட்வொர்க் நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2025 முதல் 2050ஆம் ஆண்டுக்குள் 39.5 கோடி - 61.7 கோடி டன் மின்னணுக் கருவிகள் பயன்பாட்டில் இருந்து அகற்றப்படலாம் என அதில் மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வர்கள், ஜிபியுக்கள் மட்டுமல்லாமல் மின்சாரம், குளிரூட்டல்.
நெட்வொர்க் அமைப்பு சார்ந்த கருவிகளும் இதில் அடங்கும். இக்கழிவுகளில் உள்ள காரீயம், பாதரசம் உள்ளிட்ட ஆபத்தான வேதியியல் பொருள்கள் மண், நீர், மனித உடலுக்குத் தீங்கு இழைக்கக் கூடியவை.
இந்த மின்னணுக் கழிவுகளில் பொதிந்துள்ள தரவுகளின் பாதுகாப்பு மட்டுமல்லாமல் கருவிகளின் பயன்பாட்டுக் காலம், மறுசுழற்சித் திறன், பயன்படுத்த முடியாதவற்றின் ஆபத்துத்தன்மை, கழிவுகள் கொட்டப் படும் இடம் எனப் பல விஷயங்களுக்குத் தீர்வு காணப்படுவது அவசியம் என இந்த ஆய்வு கூறுகிறது.