

மழைத்துளி விழும்போது எழும் சத்தத்தினால் விதைகள் வழக்கத்தைவிட 30 - 40% வேகமாக வளர்வதாக, அமெரிக்காவிலுள்ள மாசசூசெட்ஸ் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
சிறிய தொட்டிகளில் புதைக்கப்பட்ட சுமார் 8,000க்கும் மேற்பட்ட நெல் விதைகளைச் செயற்கை மழை, ஒளிக்கு உட்படுத்தியபோது இது கண்டறியப்பட்டிருக்கிறது.
அந்தத் தாவர செல்களில் உள்ள ஸ்டேடோலித் (statolith), மழையால் உருவாகும் ஒலி அலைகளால் உந்தப்பட்டு வளர்ச்சியை நிகழ்த்துவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், மழைச் சத்தத்தைக் கேட்காத விதைகளிடம் இத்தகைய வளர்ச்சி இல்லை. தற்போது வேறு சில விதைகள் மட்டுமல்லாமல் காற்று உள்ளிட்ட சில அதிர்வூட்டும் காரணிகளைக் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.