

பைக் பிரியர்கள் மத்தியில் தனியிடத் தைப் பிடித்துள்ள பஜாஜ் பல்சர் NS400Z பைக்-இன் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
முந்தைய மாடலில் கலர் எல்.சி.டி. டிஸ்பிளே இருந்த நிலையில், 5 இஞ்ச் டி.எப்.டி. டிஸ்பிளே இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பம்சம். இதனால், ஸ்மார்ட்போனை பைக் உடன் இணைத்து, ‘கூகுள் மேப்ஸ்’ நேவிகேஷனைத் திரையில் பார்க்கலாம்.
இதன்மூலமாக, வழித்தடத்தைத் தெரிந்துகொள்ள ஒவ்வொரு முறையும் ஸ்மார்ட்போனைக் கையிலெடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும் அழைப்பு, எஸ்எம்எஸ் அலர்ட்டுகள், மியூசிக் கன்ட்ரோல், லேப் டைமர் உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.