இந்திய இயற்பியலாளருக்குப் பெருமை! | அறிவுக்குக் கொஞ்சம்...

இந்திய இயற்பியலாளருக்குப் பெருமை! | அறிவுக்குக் கொஞ்சம்...
Updated on
2 min read

இஸ்ரேலின் வோல்ஃப் அறக்கட்டளை வழங்கிவரும் வோல்ஃப் விருதைப் பெற்ற முதல் இந்திய வம்சாவளி இயற்பியலாளர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார் பேராசிரியர் ஜெயேந்திர கே.ஜெயின்.

குவாண்டம் உலகின் போக்கை மாற்றியமைத்த கூட்டு பெர்மியன்கள் கண்டுபிடிப்பில் பங்களித்தவர் இவர். ராஜஸ்தானின் தார் பாலைவனப் பகுதியில் உள்ள சம்பார் எனும் ஊரில் பிறந்த இவர் ஜெய்ப்பூர், கான்பூரில் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் அமெரிக்கா சென்றார்.

1989இல் யேல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது, அதிவலுவான காந்தப்புலத்தில் எதிர்பாராதவகையில் எலக்ட்ரான்கள் செயல்படுவதற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சி யில் மேற்கண்ட கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். இதுவரை வோல்ஃப் விருது பெற்றவர்களில் 27 பேர் நோபல் பரிசு பெற்றிருக்கின்றனர் என்பதால் ஜெயேந்திராவின் வெற்றிக்கொடி மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in