கிட்டிப்புள்ளிலும் இருக்கு இயற்பியல் | விளையாட்டில் இயற்பியல்

கிட்டிப்புள்ளிலும் இருக்கு இயற்பியல் | விளையாட்டில் இயற்பியல்
Updated on: 
4 min read

தமிழகத்தின் பண்பாட்டில் விளையாட்டுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒவ்வொரு விளையாட்டும் சுவாரசியமானது. அப்படிப்பட்ட விளையாட்டுகளில் ஒன்று கிட்டிப்புள்.

இதைச் சில மாவட்டங்களில் கோட்டிப்புள் என்றும் அழைக்கிறார்கள். இது சிறந்த குழு விளையாட்டு. விளையாட்டு என்பதைத் தாண்டி, இதில் பல இயற்பியல் விதிகள் பரவலாகத் தெரியாமல் உள்ளன.

இந்த விளையாட்டு சில அறிவியல் பண்புகளையும் நமக்குக் கற்றுத்தருகிறது (புள் என்பது பறப்பதைக் குறிக்கும்).

கிட்டியால் புள்ளைக் கெந்தும்போது கிட்டி செல்லும் பாதை ஒரு பரவளையப்பாதை பத்தாம் வகுப்பிலும் பதினோராம் வகுப்பிலும் இயற்பியல் பாடத்தில் இந்தப் பரவளைய இயக்கம் பற்றிப் படித்திருப்போம்.

தொடக்கத் திசைவேகம்

கிட்டியால் புள் கெந்தப்படும்போது, எதிரணியினர் புள் செல்லும் திசையில் நின்று புள்ளை ‘கேட்ச்’ பிடிக்க முயல்வார்கள். அதனால் கெந்துபவர் மிகக் கவனமாகக் கெந்த வேண்டும். ஒன்று கேட்ச் பிடிக்க நிற்பவர்களைத் தாண்டிப் புள் விழும் அளவுக்குக் கெந்த வேண்டும்.

ஒரு வேளை அவ்வளவு வலிமையாகக் கெந்த முடியவில்லை என்றால் இன்னொரு வழி, புள் அதிக உயரம் செல்லாமல் தரையை ஒட்டியே கிடைமட்டமாகச் செல்லும் வகையில் புள்ளுக்குச் சரியான திசையில் திசைவேகத்தைக் கொடுக்க வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in