

முன்னணி மின்னணுக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘மிவி’, தனது முதல் 5ஜி திறன்பேசி ‘MIVI One 5G’-ஐ இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மிவி, சில ஆண்டுகளாகவே ‘மேக் இன் இந்தியா’ முன்னெடுப்புடன் செயல்பட்டுவருகிறது.
இந்தியக் காலநிலை, பயன்பாட்டுக்கு ஏற்ப ஆடியோ கருவிகளை வடிவமைத்து வெற்றி கண்டு, முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.
இயர்பட்ஸ்கள், நெக் பேண்ட், ஸ்பீக்கர், சவுண்ட்பார்கள் என்று ஆடியோ கருவிகளை மட்டுமே வழங்கி வந்த ‘மிவி’, தனது எல்லையை விரிவுபடுத்தி முதன்முறையாகத் திறன்பேசிச் சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளது.