கேளுங்க.. கேளுங்க..

கேளுங்க.. கேளுங்க..
Updated on
2 min read

ஒரு சாமானிய மனிதர், தன்னிடம் காவல்துறை விசாரணை நடத்தும்போது தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் என்ன?

ஒருவரை காவல் துறை விசாரணை நடத்துவதற்கு முன்பாக எந்த புகாரில் தன்னை விசாரணைக்கு அழைக்கிறார்கள் என்ற விவரம் காவல் துறையால் அழைப்பானை மூலம் சார்பு செய்யப்பட்டு அந்த அழைப்பாணையில் எந்த தேதியில் எத்தனை மணிக்கு என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

காவல்துறை விசாரணைக்கு முன்பு அழைப்பானை சார்பு செய்யப்பட்டதா என்ற விவரம் தெரிந்திருக்க வேண்டும். விசாரணையின் போது காவல்துறையால் துன்புறுத்தல் இருத்தல் கூடாது. முக்கிய வழக்குகளில் விசாரணையை வீடியோ மூலம் பதிவு செய்தல் வேண்டும்.

விசாரணையின் போது விசாரணையில் கூறிய விவரங்களை எழுத்து மூலமாக எழுதி விசாரணை செய்யப்படும் நபரிடம் கையொப்பம் பெற வேண்டும். விசாரணை முடிவில் காவல்துறையால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் விசாரணைக்கு உட்படும் நபரின் ரத்த உறவினர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். இவற்றை அறிந்து வைத்து இருக்க வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in