

சுதந்திரமான சிந்தனை கொண்ட விமர்சனங்களே ஒரு சமூகத்தில் இருக்கும் மனிதத்தன்மையற்ற பழமைவாத-பிற்போக்கு நம்பிக்கைகள், செயல்பாடுகளை மாற்ற உதவும். நமது சமூகம், பண்பாட்டில் நிகழ்ந்துள்ள எல்லா மாற்றங்களும் இப்படிச் சுதந்திரச் சிந்தனையால் விளைந்தவையே. இதை நமது அரசமைப்பும் அங்கீகரிக்கிறது.
இப்படிச் சுதந்திரச் சிந்தனை, அறிவியல் பார்வை போன்றவற்றுக்கு அடிப்படையான அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என நமது அரசமைப்பு 51 ஏ (ஹெச்) வலியுறுத்துகிறது.