ஜனநாயகத்தின் உயிர் மூச்சு

ஜனநாயகத்தின் உயிர் மூச்சு
Updated on
2 min read

தகவல் என்பது ஜனநாயகத்தின் நாணயம்; துடிப்பான சிவில் சமூகத்தின் வளர்ச்சிக்கு அதுவே மிக முக்கியமானது. ஜனநாயகம் என்பது வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பதோடு முடிந்துவிடும் சடங்கல்ல; அது அதிகாரத்தின் இருள் அறைகளில் வெளிச்சத்தைப் பாய்ச்சும் தொடர் விழிப்புணர்வு ஆகும்.

அரசாங்கத்தின் ரகசியப் போக்கு அதன் சொந்தக் கல்லறையையே தோண்டிக்கொள்கிறது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்ததன் விடியலாகவே, இந்திய வரலாற்றை மாற்றியமைத்த ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI), 2005’ பிறந்தது.

எளிய மனிதனின் கேள்வி

இச்​சட்​டத்தின் விதை, சாதாரணக் கிராமத்து ஏழைத் தொழிலா​ளியின் குமுறலில் இருந்து முளைத்தது. ராஜஸ்​தானின் சிறு கிராமம் ஒன்றில், ஒரு கூலித் தொழிலாளி, “நான் உழைத்த கூலிப்பணம் எங்கே?” என்று எழுப்பிய எளிய கேள்வி, காலப்​போக்கில் தேசத்தையே உலுக்கிய மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது.

1990களில் ராஜஸ்​தானில் அருணா ராய், நிக்கில் டே போன்றோரால் தொடங்​கப்பட்ட “மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன்” என்ற அமைப்பு, “ஹமாரா பைசா, ஹமாரா ஹிசாப்” (எங்கள் பணம், எங்கள் கணக்கு) என்ற முழக்​கத்​துடன் களமிறங்​கியது.

கிராமச் சதுக்​கங்​களில் நடந்த பொது விசாரணைக் கூட்டங்​களில் அரசுப் பதிவேடுகள் வாசிக்​கப்​பட்டு, போலி பில்களும் ஊழல்களும் அம்பலப்​படுத்​தப்​பட்டன. இந்த மக்கள் போராட்டமே, 1923ஆம் ஆண்டின் காலனித்துவ ‘உத்தி​யோகபூர்வ ரகசியச் சட்டத்​தின்’ இரும்புத் திரையைக் கிழித்து, 2005இல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிறக்கக் காரணமாக அமைந்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in