

வழக்கமாகக் கணினியின் கீபோர்டில் தட்டச்சு செய்யும்போது விரல்களை நகர்த்து வோம்.
இந்த முறையைத் தலைகீழாக மாற்றி, நகரும் கீபோர்டை வடிவமைத்திருக்கிறது கூகுள் ஜப்பானின் ஜி-போர்டு (Gboard) குழு.
‘Gboard Kurukuru’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கீபோர்டில், கன்வேயர் பெல்ட்டுகளில் (Conveyor Belts) விசைப் பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நான்கு பெல்ட்டுகளில் தலா 29 விசைப் பொத்தான்கள் என மொத்தம் 116 பொத்தான்கள் உள்ளன. இதில் வழக்கமான எழுத்துகள், எண்கள், சின்னங்கள் அடங்கும்.