வந்துவிட்டது ஓட்டுநர் இல்லா டாக்ஸி!

வந்துவிட்டது ஓட்டுநர் இல்லா டாக்ஸி!
Updated on: 
1 min read

தானியங்கி வாகனத் தொழில்நுட்பத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கக்கூடிய ரோபாட் டாக்ஸிகள் அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கின்றன; இது இந்தியாவில் அல்ல, ஜப்பானில் நிகழவிருக்கிறது.

இதற்காக டொயோட்டா உடன் கூட்டுச் சேர்ந் துள்ள வேமோ, அதன் bZ4X ரக மின் வாகனங்களைப் பயன்படுத்த இருக்கிறது. குறிப்பிட்ட சூழல்கள், நிபந்தனைகளின் கீழ், கார் ஓட்டுவதில் மனிதத் தலையீடு இல்லாமல் இந்த வாகனங்கள் இயங்கும்.

இதன் கட்டமைப்பு, உற்பத்திப் பணிகளை டொயோட்டாவும், தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பத்தை வேமோ சார்ந்துள்ள ஆல்ஃபபெட் நிறுவனமும் கையாள்கின்றன. இந்த வாகனங்கள் 4ஆம் நிலை தானியங்கி இயக்க (Level 4 autonomous driving) ஆற்றலைப் பெற்றவை.

“ரோபாட் டாக்ஸிகளைப் பாதுகாப்பாக வடிவமைப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளை இதன் மூலம் மேம்படுத்த முடியும். இதிலுள்ள சவால்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, தீர்வு காணவும் முடியும்“ என்று டொயோட்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வேமோ நிறுவனம் ரோபாட் டாக்ஸி சேவையைக் குறிப்பிட்ட சொகுசு ரகக் கார்களில் வணிகரீதியாக வழங்கிவருகிறது. தனது சேவையை விரிவுபடுத்தும் வகையில் ஜப்பானிலும் நிகோன் கொட்சூ போன்ற டாக்ஸி நிறுவனங்களுடன் வேமோ கூட்டணி அமைத்து வருகிறது.

உபர், நிசான், பிரிட்டனின் வேவ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்தும் ஓட்டுநர் இல்லாத டாக்ஸி சேவையை விரிவுபடுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

வந்துவிட்டது ஓட்டுநர் இல்லா டாக்ஸி!
இணையத்தில் வாசனையைப் பரப்பலாமா?

X