சிதைக்கப்படும் தாய்மையின் அழுகுரல்

சிதைக்கப்படும் தாய்மையின் அழுகுரல்
Updated on
2 min read

திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் வசந்தத்தின் தொடக்கம் என்பார்கள். ஆனால், பல பெண்களுக்கு அது ஒரு ‘கணக்கெடுப்பு மையமாகவே’ மாறிப்போகிறது. மணமான முப்பதாவது நாள், அந்த வீட்டின் நாட்காட்டியில் ஒரு குறியீடு இடப்படுகிறது. அது அவளது மாதவிடாய் சுழற்சிக்கான கணக்கு.

ஒவ்​வொரு மாத​மும் உதிரப்​போக்​குத் தொடங்​கும்​போது, அந்​தப் பெண்​ணின் இதயம் சுக்​குநூறாகிறது. “இந்த மாத​மும் ஏமாற்​றி​விட்​டாளே” என்ற மாமி​யா​ரின் முணு​முணுப்​பும், கணவனின் மவுன​மான நிராகரிப்​பும் அவளை ஒரு ‘தோல்​வி​யுற்ற இயந்​திர​மாக’ உணரச் செய்​கின்​றன.

ஓரிரு ஆண்​டு​கள் குழந்தை இல்​லை​யென்​றால், சமூகம் அவளுக்​குச் சூட்​டும் பெயர் ‘மலடி’. ஒரு​முறை கூட அவளை மருத்​து​வப் பரி​சோதனைக்கு அழைத்​துச் செல்​லாத கணவன், “குறை உன்​னிடம்​தான்” என்று தீர்ப்பு எழுதுகி​றான். இது​தான் நிவே​திதா - அறிவு தம்​ப​தி​யினரின் வாழ்க்​கை​யில் நிவே​தி​தாவுக்கு நேர்ந்த அவலம்.

கருப்பை எனும் அதிச​யம்

ஒரு பெண் கரு​வுற்ற கணத்​தி​லிருந்​து, இயற்கை அவளுக்​குள் ஒரு பேர​திச​யத்​தைச் நிகழ்த்​தத் தொடங்​கு​கிறது. சாதா​ரண​மாக ஒரு சிறிய பேரிக்​காய் அளவில் இருக்​கும் அந்​தத் தசைப் பை (கருப்​பை), ஓர் உயிரைத் தாங்​கத் தயா​ராகும்​போது தன்​னைத் தானே 500 மடங்கு வரை விரி​வாக்​கிக் கொள்​கிறது.

இது உலகிலேயே வேறெந்​தத் திசு​வாலும் செய்ய முடி​யாத ஓர் அற்​புதம். அந்​தக் கருப்​பைக்​குள் ஒரு ‘பனிக்​குடம்’ உரு​வாகிறது. அது ஒரு சிறு கடல் போல குழந்​தையைத் தன்​னுள் ஏந்​திக்​கொள்​கிறது. வெளி உலகின் அதிர்​வு​கள், சத்​தங்​கள் எது​வுமே அந்​தப் பிஞ்சு உயிரைத் தீண்​டாத​வாறு, நீரினடி​யில் ஒரு தொட்​டிலைப் போல குழந்​தையை அது தாலாட்​டு​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in