

நுபுரா, ஜானவி
தோழிகள் ஜான்வியும் நுபுராவும் செவித் திறன் குறை பாடுடைய மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் நடன நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றிருந்தனர். நடன ஆசிரியர் காட்டும் 'பாவ'ங்களைப் பார்த்து மேடையில் இருந்த குழந்தைகள் நடன அசைவுகளைச் செய்துகாட்டினர். ஆனால், இசை யின் தாளத்துடன் அவர்களின் அசைவு ஒத்திசையவில்லை.
புனே எம்ஐடி உலக அமைதிப் பல்கலைக்கழகத்தின் தொழிற்துறை கருவிகள் வடிவமைப்புத் துறை மாணவிகளான ஜானவி ஜோஷி, நுபுரா கிர்லோஸ்கர் இதைக் கவனித்தனர். தாங்கள் எதற்காகக் கல்லூரியில் படிக்கிறோம் என்கிற அர்த்தத்தை உணர்ந்தனர்.
அதன் விளைவு, தாளங்களைக் காதால் கேட்க முடியாதவர் களுக்கு, அவற்றை அதிர்வுகளாக மாற்றக்கூடிய ஓர் அணிகலனை உருவாக்கினர்.
2015இல் இது நிகழ்ந்தது. ‘ப்ளீ வாட்ச்’ (Blee Watch) எனும் இந்தக் கைக்கடிகாரம் மூலம் செவித்திறன் குறை பாடுள்ளவர்கள் இசையின் தாளத்தை மணிக்கட்டில் அதிர்வாக உணர்ந்து, எந்தவிதச் சிரமமும் இன்றி பாட்டுக்கு ஏற்ப மகிழ்ச்சியாக நடனமாட முடியும்.
இசை மட்டுமல்ல, வாசல் கதவில் பொருத்தப்பட்டிருக்கும் அழைப்பு மணி, அலாரம் எனப் பலவிதமான ஒலிகளைத் துல்லியமான அதிர்வுகள், வண்ணக் குறியீடுகள், எமோஜிகளாக மாற்று கிறது இந்தக் கைக்கடிகாரம்.
குறிப்பாக ஆபத்தான காலக்கட்டங் களில் அவசர ஒலிகளை எச்சரிக்கையாக உணர்த்துவதன் வழியாகக் காது கேளா தோர் சுயமாகவும் பாதுகாப்பாகவும் நடமாடப் பெரிதும் உதவுகிறது.
தேவைப் படும்பட்சத்தில், தற்போது எங்கே இருக்கிறோம் என்று அறிகிற ‘current location’ தகவலைத் தங்களுக்கு உதவக் கூடியவர்களுக்குப் பகிர்ந்துகொள்ளும் வசதியும் உள்ளது.
‘ப்ளீ வாட்ச்’க்குக் கிடைத்த வர வேற்பை அடுத்து, ‘பிளீடெக் இன்னோ வேஷன்ஸ்' (Bleetech Innovations) நிறுவனத்தை இவ்விரு தோழிகளும் நடத்தத் தொடங்கினர். இதன்மூலம், செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளின் அறிவுத் தேட லுக்கு உதவும் ‘ப்ளீடிவி’ செயலியை (BleeTV App) வடிவமைத்தனர். இந்தியச்சைகை மொழியில் (ISL) கல்வி, பொழுது போக்கு உள்ளடக்கங்களை வழங்கும் செயலி இது.
இந்த மாணவர்கள் பாடம் கற்பது, உலகத்துடன் தொடர்பில் இருப்பது இதன் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது. ‘பிளீடெக் இன்னோவேஷன்ஸ்’ நிறுவனத்தில் பணிபுரியச் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது மற்றுமொரு சிறப்பு.