செக் லிஸ்ட்டை மறக்காதீங்க...

செக் லிஸ்ட்டை மறக்காதீங்க...
Updated on
1 min read

சுற்றுலா செல்வதற்கு முன்னதாகவே திட்டமிடும்போது, எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்களைக் காகிதம் ஒன்றில் சிலர் எழுதி வைத்துக் கொள்வார்கள். இப்போது அந்தச் சிரமமும் வேண்டாம்; ‘வொண்டர் லிஸ்ட்’ போன்ற பல ‘செக் லிஸ்ட்’ செயலிகள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றைத் தரவிறக்கம் செய்துகொண்டால் போதும்.

‘செக் லிஸ்ட்’ செயலியில் பட்டியலிட்டுள்ள பிரிவுகளில் நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்களைக் குறித்துக்கொண்டே வரலாம். உள்நாடு - வெளிநாடு என எங்கே சுற்றுலா செல்கிறீர்கள், அது எந்த சீசன், எந்த ஊர், எந்த நாடு என்பதைப் பொறுத்து ஆடைகள், பொருள்கள், ஆவணங்கள் ஆகியவை மாறுபடலாம். இதோ உங்களுக்காக ஓர் அடிப்படையான ‘செக் லிஸ்ட்’.

 பயண டிக்கெட் பிரிண்ட் அவுட்கள். டிஜிட்டல் காபியை மட்டும் நம்பியிருப்பது பல வேளைகளில் உதவாது. உள்நாட்டு விமான டிக்கெட் என்றால் இணையத்தின் வழியாகவே ’வெப் செக் இன்’ செய்து, ‘போர்டிங் பாஸ்’ பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்வது அவசியம். வெளிநாடு எனில் விசா பிரதி, பாஸ்போர்ட் ஆகியவற்றைக் கைப்பையில் வைத்துக்கொள்வது பாதுகாப்பு.

 ஆதார் போன்ற அடையாள அட்டைகள் - பாஸ்போர்ட், விசா ஆகியவை டிஜிட்டல் காபியாக உங்கள் மின்னஞ்சலில் இருக்க வேண்டியது அவசியம். டிராவல் இன்சூரன்ஸ் பிரதி, ஹெல்த் இன்சூரன்ஸ் ஐடி கார்டுகள்.

 முக்கியமான தொடர்பு எண்களை ஒரு கையடக்க நோட்டிலோ ஒரு காகிதத்திலோ எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

 துணைநோய் மருந்துகள். அவசரத் தேவைக்கான மருந்துகள் (எடுத்துக்காட்டு: பாராசிட்டமால், செட்ரிசின், இருமல் சிரப் போன்றவை). நாப்கின்கள், ஒரு சிறு முதலுதவிப் பெட்டி.

 சுடுநீர் தேவைப்படும் எனில் தங்கும் விடுதியை நம்பிக்கொண்டிருக்காமல் இருக்க ‘மினி எலெக்ட்ரிக் கெட்டில்’ எடுத்துச்செல்வது அவசியம். சுடுநீரை வைத்துக்கொள்ள ஃபிளாஸ்க்.

 ரயில் பயணம் எனில் காற்று நிரப்பிக்கொள்ளும் தலையணைகள்.

 கையடக்க ‘பவர் பேங்க்’, சார்ஜர்கள், வெளிநாட்டுப் பயணம் எனில் ‘யுனிவர்சல் பவர் அடாப்டெர்.’

 மேக் அப் கிட் - பாடி ஸ்பிரே போன்ற ஆல்கஹால் கலந்த பொருள்கள், ஷாம்பு, இருமல் சிரப் போன்ற திரவப் பொருள்கள், சிசர், ரேசர் போன்ற கூர்மையான பொருள்கள் ஆகியவற்றை ‘செக் இன் லக்கேஜ்’இல் வைத்துவிட வேண்டும். இவற்றைக் கைப்பையில் எடுத்துச் செல்வதற்கு அனுமதி கிடையாது.

 வெளிநாட்டுப் பயணம் எனில் செல்லும் நாட்டின் பணத்துக்குச் சில ஆயிரங்களை மாற்றி வைத்துக்கொள்வது அவசியம்.

 எளிதில் பரவும் தொற்றுநோய்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளத் தேவையான எண்ணிக் கையில் முகக் கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை மறக்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in