மகான்களின் வாக்கு

மகான்களின் வாக்கு
Updated on: 
1 min read

நாம் வாழும் இந்த உலகமானது, ‘நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’ என தமிழர்களின் தொன்மையான தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றை இயற்கை தெய்வங்களாக மனிதன் வழிபட்டான். இந்த ஐம்பெரும் சக்திகள் மனிதனுக்கு கட்டுப்படாது. ஆனால் மகான்களுக்கு இது சாத்தியம்.

சிருங்கேரி  சாரதா பீடத்தின் 34-வது பீடாதிபதியாக 1912 முதல் 1954 வரை அருளாட்சி செய்தவர்  சந்திரசேகர பாரதி சுவாமிகள். இவர் சிறந்த தவயோகி மட்டுமின்றி ஜீவன் முக்தர்.

1924-ம் ஆண்டு தமிழகத்தில், சுவாமிகள் விஜய யாத்திரை செய்யும் நேரத்தில் தேவகோட்டை நகர மக்களின் அழைப்பை ஏற்று தேவகோட்டையில் முகாமிட வருகை தந்தார். அந்த சமயத்தில் ஊரில் தண்ணீர் பஞ்சம். நான்கு ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in