ஸ்ரீ சாய் பாதானந்தா: பொய்யாமணியில் ஓர் ஆலயமணி

ஸ்ரீ சாய் பாதானந்தா: பொய்யாமணியில் ஓர் ஆலயமணி
Updated on: 
3 min read

பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி அறக்கட்டளை சார்பில், ‘சாய் பாதானந்தா’ என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் சென்னையில் திரையிடப்பட்டது.

‘பொய்யாமணி செல்வர்’ என்று போற்றப்படும் ஸ்ரீ ராதா கிருஷ்ண சுவாமிஜி 1906-ம் ஆண்டு திருச்சி அருகே பொய்யாமணியில் அவதரித்தவர். தெய்வத்தைத் தேடி அலைந்து பின்னர் ஷீர்டி சாய்பாபாவின் சீடர் நரசிம்ம சுவாமிஜியின் சீடரானார்.

பெங்களூரு சாய் ஸ்பிரிச்சுவல் சென்டரின் நிறுவனராகவும் சென்னை அகில இந்திய சாய் சமாஜத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் சேவை செய்தவர் சாய் பாதானந்தா. அனைவரிடத்திலும் நிபந்தனையற்ற அன்பு காட்ட வேண்டும் என்று போதித்தவர். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி சுவாமிஜி பெங்களூருவில் மகா சமாதி அடைந்தார்.

சுவாமிஜியின் ஆன்மிகப் பயண நிகழ்வுகளை உள்ளடக்கி ஓர் ஆவணப் படைப்பாக ‘சாய் பாதானந்தா’ திரைப்படத்தை ஸ்ரீ ராதா கிருஷ்ண சுவாமிஜி அறக்கட்டளை தயாரித்துள்ளது. ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமி அவதரித்த பொய்யாமணியில் இருந்து கதை தொடங்குகிறது. அவரது இளமைக் காலம், இறைவனைத் தேடுதல், அவரது திருமணம், அவரது பணி, நரசிம்ம சுவாமிஜியை சந்தித்தல், மக்கள் மத்தியில் சொற்பொழிவு நடத்துதல், ஆன்மிக சேவை செய்தல், அவரது முதுமைக் காலத்தில் இறைவன் அவருக்கு மனித வடிவில் காட்சி அருளல், வாழ்க்கையின் நிறைவு குறித்த இறைவனின் குறிப்பு ஆகியன கனகச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in