நல்வாழ்வு அருளும் விநாயகர் வழிபாடு..! | நூல் அறிமுகம்

நல்வாழ்வு அருளும் விநாயகர் வழிபாடு..! | நூல் அறிமுகம்
Updated on: 
1 min read

இறைவன் எடுக்கும் பல்வேறு திருவுருவங்களில் முதன்மையான திருவுருவம் கணபதி உருவம் ஆகும். எந்த செயலைத் தொடங்கும் முன்பும் கணபதியைத் தொழுத பின்னரே தொடங்க வேண்டும் என்பது சாஸ்திர விதி. இடையூறுகளை ஏற்படுத்துபவரும், அவற்றை அகற்றுபவரும் அவரே என்பதால், தேவர்கள் அனைவரும் அவரை வழிபட்டு உய்ந்தனர்.

பல யுகங்களில் பல காரணங்களுக்காக தம் அடியவர்களுக்காக அருள்செய்வதற்காகவும், தீய சக்திகளை அழிப்பதற்காகவும் விநாயகப் பெருமான் பல்வேறு வடிவங்களை எடுத்து வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் புராண வடிவங்கள் தவிர மக்கள் தாம் விரும்பும் இன்பங்களை, நன்மைகளை அடைவதற்காகவும் விநாயகப் பெருமான் பல வடிவங்களை எடுத்துள்ளார். அந்த வடிவங்கள் தத்துவநிதி என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மைசூரை ஆண்ட மூன்றாம் கிருஷ்ணராஜ் உடையார் (1794 – 1868) இந்நூலை எழுதினார்.

தத்துவநிதியின் மூன்றாவது பகுதியான சிவநிதியில் கணபதியின் 32 வடிவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த வடிவங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பலமுறை தியான ஸ்லோகங்களுடன் மட்டும் வெளியாகியுள்ளன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in