

ஈசனின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 169-வது தலமாக விளங்கும் சித்தாய்மூர் பொன்வைத்த நாதர் கோயில் செல்வச் செழிப்பு அருளும் தலமாகப் போற்றப்படுகிறது.
சித்தாய்மூர் செட்டித் தெருவில் சங்கரன் என்ற சிவபக்தர் வசித்து வந்தார். இவரது மனைவி அன்பிற்பெரியாள். கர்ப்பிணியாக இருந்த மனைவியை விட்டுவிட்டு கணவர், வியாபார நிமித்தமாக வேறு நாட்டுக்கு சென்றுவிட்டார்.
தனியாக வாழ்ந்த அன்பிற்பெரியாள் தினமும் சிவன்கோயிலுக்குச் சென்று அனைத்து இடங்களையும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டாள். மேலும் ஈசனுக்கு பூமாலை தொடுத்துக் கொடுத்தாள்.
அன்பிற்பெரியாளின் சிவப்பணிகளில் மகிழ்ந்த ஈசன், அவளது செலவுக்காக தினமும் ஒரு பொற்காசை கோயில் வாசற்படியில் வைத்தார். இதனால் இத்தல ஈசன், ‘பொன்வைத்த நாதர்’ என்று அழைக்கப்பட்டார்.