தம்பதிக்குள் ஒற்றுமை அருளும் கொளத்தூர் துளசீஸ்வரர் | பரிகார ஸ்தலங்கள்

மூலவர்: துளசீஸ்வரர், அம்பாள்: ஆனந்தவல்லி

மூலவர்: துளசீஸ்வரர், அம்பாள்: ஆனந்தவல்லி

Updated on
1 min read

துளசிச் செடிகள் நிறைந்து காணப்படும் கொளத்தூர் தலத்தில் அருள்பாலிக்கும் துளசீஸ்வரர், சுவாசக் கோளாறுகள் நீக்கும் ஈசனாக போற்றப்படுகிறார். தம்பதிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

தலவரலாறு: அகத்தியர், கயிலாயத்திலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது, எங்குப் பார்த்தாலும் துளசிச் செடிகள் நிறைந்த வனமாகக் காட்சியளித்த தலத்துக்கு வந்தார். சிவ வழிபாட்டுக்கு உரிய நேரம் ஆனதால், சுற்றும் முற்றும் பார்த்தார். ஆனால் எங்கும் கோயில் காணப்படவில்லை.

அப்போது, “அகத்தியரே, என்னைத் தேடி வேறெங்கும் அலைய வேண்டாம். நான் இங்கே துளசிச் செடிகள் சூழ மறைந்து இருக்கிறேன்” என்று அசரீரி ஒலி வந்த வட திசையை நோக்கிச் சென்றார் அகத்தியர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in