தோஷங்கள் களையும் பிரம்மதேசம் கைலாசநாதர்

தோஷங்கள் களையும் பிரம்மதேசம் கைலாசநாதர்
Updated on
3 min read

திருநெல்வேலி மாவட்டம் பிரம்மதேசம் கைலாசநாதர் கோயிலில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தட்சிணாயண புண்ணிய காலத்திலும், உத்தராயண புண்ணிய காலத்திலும் சூரியனின் ஒளிக் கிரணங்கள் சுயம்புத் திருமேனியின் மீது படும்.

கோயில் ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இத்தலம் நவ கைலாயத் தலத்துள் ஒன்றாகும்.

பிரம்மஹத்தி தோஷத்தால் அவதிப்படும் நான்முகனின் பேரனான உரோமச முனிவர் தனது தோஷ நிவர்த்திக்காக பல சிவத்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு வந்தார்.

அவ்வாறு யாத்திரை செல்லும்போது இந்த வனப்பகுதிக்கு வந்தார். இலந்தைக் காடாக இருப்பதைக் கண்டார். ஓர் இலந்தை மரத்தடியில் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கும் ஈசனைக் கண்டார். உடனே இவ்விடத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார்.

பின்னர் சுவாமியை இங்கேயே பிரதிஷ்டை செய்து பூஜித்தார். மனமுருகி வணங்கியதால் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார். அவர் பிரதிஷ்டை செய்த சிவபெருமான் இத்தலத்தில் கைலாச நாதராக கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நான்முகன் (பிரம்மதேவனின்) பேரனுக்கு தோஷம் நீக்கிய திருத்தலம் என்பதால், இத்தலத்துக்கு பிரம்மதேசம் அல்லது அயனீஸ்வரம் என்று பெயர் விளங்குகிறது. நவக்கிரக தலங்களில் இத்தலம் சூரிய பகவானின் தலம் என்பதால் இத்தலத்தில் தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்துக்கு ஆதிகைலாயம் என்று பெயர். இத்தல ஈசனை வழிபட்டால் காசி, ராமேஸ்வரம் சென்று ஈசனை வணங்கிய பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in