நல்வாழ்வு அருளும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் | பரிகார ஸ்தலங்கள்

நல்வாழ்வு அருளும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் | பரிகார ஸ்தலங்கள்
Updated on
2 min read

திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் 38 கிமீ தொலைவிலும், வீரவநல்லூரிலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ள அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் கோயில் நல்வாழ்வு அருளும் தலமாக போற்றப்படுகிறது.

தல வரலாறு:

சிறந்த பெருமாள் பக்தனான இந்திரதிம்னன், தனது குருவான அகத்திய மகரிஷி தன் அவைக்கு வந்த போது அவரை வரவேற்காமல், அவமதித்தான். கோபமுற்ற மகரிஷி அவன் யானையாக மாறி, வனத்தில் சுற்றித் திரிந்து பின் மோட்சம் பெறுவான் என சபித்தார். இதையடுத்து மன்னன் காட்டில் யானைகளின் தலைவனாக கஜேந்திரன் என்ற பெயரில் வாழ்ந்து வந்தான்.

இது ஒருபுறமிருக்க, கபில முனிவர் ஒருமுறை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நீராடிக் கொண்டிருந்த கந்தர்வன், விளையாட்டாக அவரது காலைப் பிடித்தான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in