நாகதோஷம் தீர்க்கும் ஆற்காடு குப்பம் சோளீஸ்வரர்

நாகதோஷம் தீர்க்கும் ஆற்காடு குப்பம் சோளீஸ்வரர்
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு குப்பம் சோளீஸ்வரர் கோயில், முதலாம் பராந்தக சோழன், பாம்பாட்டி சித்தர் உள்ளிட்டோருக்கு அருள்பாலித்த தலமாக விளங்குகிறது. அகத்திய முனிவர் வழிபட்ட சிவபெருமான், இத்தலத்தில் அகத்தீஸ்வரராக அழைக்கப்பட்டு, சோழர்களால் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டதால், பின்னர் சோளீஸ்வரராக போற்றப்படுகிறார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆற்காடு என்ற ஊர் உள்ளது. ஆறு காடுகள் இருந்த ஒரு பகுதியாக இருந்ததால் அப்பகுதி ‘ஷடாரண்யம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆறு காடுகளில் சப்தரிஷிகள் ஆசிரமம் அமைத்து ஈசனை பூஜை செய்து வந்தனர்.

இதே போன்று திருத்தணி அருகேயும் ஆறு காடுகள் இருந்ததாகவும், அங்கு சப்தரிஷிகள் ஈசனை வழிபட்டதாகவும் அறியப்படுகிறது. அந்த ஆற்காட்டில் இருந்து இந்த ஆற்காட்டை வேறுபடுத்தும் விதமாக திருவள்ளூர் மாவட்ட ஆற்காடு, ‘ஆற்காடு குப்பம்’ என்று அழைக்கப்படுகிறது.

மகாலட்சுமிக்கு திருநின்றவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தலங்களுடன் தொடர்பு இருப்பது போல் ஆற்காடு குப்பம் தலத்துடனும் தொடர்பு உண்டு. ஒரு சமயம் திருமாலுக்கும், மகாலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in