கவிதை என்னும் தேனமுது | இராம கதாம்ருதம் 52

கவிதை என்னும் தேனமுது | இராம கதாம்ருதம் 52
Updated on: 
2 min read

கவிதைகள், காவியங்கள் ஆகியவற்றுக்கெல்லாம் முன்னோடி வால்மீகி முனிவர். காரணம், அவர் இயற்றிய இராமாயணமே கவிதை என்னும் தேனமுதை, காவியம் என்னும் அமுதகலசத்தைத் தோற்றுவித்தது.

‘மதுமய பணிதீனாம் மார்க்கதர்சீ மஹர்ஷி’ என்று இதனைப் போற்றுகிறார், இராமாயண சம்பு என்னும் உரையிடையிட்ட செய்யுள் காவியத்தை ஆக்கிக் கொடுத்த அரசர் போஜராஜர். 9-10-ம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த ராஜசேகரக் கவி இயற்றிய பிரசண்ட பாண்டவர் என்னும் நாடகத்தில், வால்மீகியும் வியாசரும் சந்திக்கிறார்கள். அவர்களின் உரையாடல் இவ்வாறு தொடர்கிறது:வியாசர் – பகவன் முனியே, பராசர புத்திரன் தங்களை வணங்குகிறேன்.

வால்மீகி – பேரன்புக்குரிய வியாசரே, தங்களின் படைப்பு முற்றுப்பெற முற்றுப் பெற, தங்களின் புகழ் ஓங்கட்டும். வியாசர் – பிரதம கவியான குருவே. தங்களுக்கு வணக்கம். தங்களின் பெருங்கருணையான காவியப் படைப்புக்கும் வணக்கம். வால்மீகி – பதினெண் புராணங்களைச் செய்ய இருப்பவரே. தங்களின் மஹாபாரதக் காவியம் மிகப் பெரியது.

வியாசர் – (நாணத்தில் நெளிகிறார்) அடியேனின் சிறிய செயலைச் சொல்லி, என்னை நாணப்படுத்துகிறீர். என் உபாத்யாயரே, தங்களின் இராமகாதைக்கு முன்னர், பிறரெல்லாம் எம்மாத்திரம்? தாங்கள் தந்திருக்கும் இக்காவியம், நாவுக்குத் தேன்; செவிக்கு அமுதம். மொத்தத்தில் எல்லோரையும் புனிதப்படுத்தும் பெருமிதம். நீரே ஆதிகவி. தலை வணங்குகிறேன்.

ஆதிகவி, உபாத்யாயர், பிரதம கவி, குரு என்றெல்லாம் வியாசராலேயே வால்மீகி முனிவர் போற்றப்பட்டார் என்றால், இராம கதையின் பெருமையை என்னென்பது! இராமனையே ஏன் திரும்பத் திரும்பப் பாடவேண்டும் என்னும் வினாவுக்கு விடையிறுக்கிறார் முராரி என்னும் கவிஞர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in