இராம கதையே அறவரலாறு! | இராம கதாம்ருதம் 49

இராம கதையே அறவரலாறு! | இராம கதாம்ருதம் 49
Updated on: 
2 min read

அறத்தின் வடிவமே இராமன் என்பதையும் இராம கதையே அறவரலாறு என்பதையும் விளக்குவதற்கு சிற்சில சம்பவங்கள் அவசியப்படுகின்றன. சில வினோத வினாக்கள் தொடுக்கப்பட்டு, அவற்றுக்கு தகுந்த விடைகளும் அளிக்கப்படுகின்றன.

இராமாயணத்தில் நாஸ்திக வாதம் பேசப்படுகிறதா? சற்றே வினோதமான வினாவாகத் தோன்றலாம். ஆயினும், ‘உண்டு’ என்பதுதான் விடை.

சித்திரகூடத்தில் இருக்கும் இராமனோடு, ஜாபாலி என்னும் முனிவர் செய்யும் வாதமானது, முழுக்க முழுக்க நாஸ்திகம். தந்தையின் சொற்களையும் மதிப்பையும் காப்பாற்ற வேண்டுமானால், தான் அயோத்தி திரும்ப முடியாது என்று மறுதலிக்கும் இராமனை மறித்தும் மறுத்தும் பேசுகிறார் ஜாபாலி.

க: கஸ்ய புருஷோ பந்து: கிமாப்யம் கஸ்ய கேனசித்

ஏகோ ஹி ஜாயதே ஜந்துர் ஏக ஏவ விநச்யதி

இராமா, ஒருவருக்கும் (இன்னொருவர்) நட்போ துணையோ இல்லை; இன்னொருவரிடமிருந்து ஒருவருக்கு எதுவும் கிடைப்பதுமில்லை; ஏனெனில், எந்த உயிரும் தனியாகத்தான் பிறக்கிறது; தனியாகத்தான் இறக்கிறது.

எனவே, தந்தை தாய் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு ஒருவர் மீது பற்று வைப்பவன், பித்தனுக்குச் சமானமானவன். யாரும் யாருக்கும் சொந்தமில்லை. வழிபோக்கன் ஒருவன், ஓரிரவு கிராமத்தில் தங்கி மீண்டும் பயணத்தைத் தொடர்வதைப் போன்றுதான், தந்தை, தாய், இல்லம், செல்வம் எல்லாமே தற்காலிகத் தங்குமிடங்கள்.

புத்திசாலிகள், இவற்றோடு ஒட்டிக் கொள்ளமாட்டார்கள். அயோத்தி அரசை விட்டுக் கொடுத்து நீ அவதிப்படவேண்டாம். இதில் எந்த வகையான கடவுள் குற்றமும் வந்துவிடாது. தந்தையைக் கடவுள் என்றெல்லாம் நினைக்காதே.

ந தே கஸ் சித் தசரதஸ் த்வம் ச தஸ்ய ந கஸ்சன – தசரதன் உனக்கு எதுவுமில்லை; நீயும் அவனுக்குச் சொந்தமில்லை. தந்தை என்பவன் ஓர் உயிர் பிறப்பதற்கு வழி செய்பவன் மட்டுமே. அவன் இப்போது இல்லை. எல்லா உயிர்களும் இறக்கும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in