இராமனைத் தேடும் மந்தரை | இராம கதாம்ருதம் 36

இராமனைத் தேடும் மந்தரை | இராம கதாம்ருதம் 36
Updated on
3 min read

இ​ராமகாதையை வாசிக்கும்போது, ஒரு சில கதைமாந்தர்கள் நம்முடைய எரிச்சலுக்கும் வெறுப்புக்கும் உள்ளாவார்கள். அப்படிப்பட்டவர்களில், மந்தரை என்னும் கூனியும் ஒருவள். கைகேயியின் மனதை மாற்றியவள் என்பதாலும், இராமனைக் கானகம் அனுப்பியதில் இவளின் பங்கு அளப்பரியது என்பதாலும் இப்படியொரு நிலை.

குவெம்பு என்றறியப்பெற்ற கன்னட மொழி எழுத்தாளர் கே.வி.புட்டப்பா அவர்களால் 1940-50களில் இயற்றப்பட்டது ஸ்ரீராமாயண தர்சனம் என்னும் வசன கவிதைமுறை காப்பியம். வித்தியாசமான மந்தரையை இக்காப்பியத்தில் சந்திக்கலாம்.

அரசிகள் மூவரும் தத்தம் குழந்தைகளுடனும் வேறு சில சிறுவர்களுடனும் தோழிப் பெண்களுடனும் அரண்மனைப் புல்வெளிகளில் அமர்ந்திருக்கின்றனர். அதுவொரு முழுநிலா நாள். பூரண நிலவைப் பார்க்கும் இராமன், பெருங்குர லெடுத்து அதைக் கேட்கிறான்.

வேறு ஏதேதோ பொம்மைகளைக் கொடுக்கிறாள் கோசலை. கெஞ்சுகிறாள்; கொஞ்சுகிறாள்; மிரட்டுகிறாள்; தண்டிப்பதாக விரட்டுகிறாள். எதற்கும் பணியாத அந்தக் குழந்தை, கதறிக் கதறி அழுகிறான்.

எல்லோரும் தவிக்க...குழந்தையின் அழுகுரல் ராஜசபையையே அல்லோல கல்லோலப்படுத்த, சக்கரவர்த்தியும் பதறி ஓடிவர, சுமந்திரனை அழைக்க, அமைச்சர்களை அழைக்க... நிலாவைப் பிடித்துக் கொடுப்பதா? எப்படி முடியும்? அத்தனை அமளியிலும், குழந்தை பரதனைக் கையில் ஏந்தியபடி வருகிறாள் அவள் – கன்னங்கரேலென்று, காளையொன்றின் திமிலளவுக்கு முதுகு வளைந்து... காணவே அருவருப்பான சதைப் பிண்டமாக... மந்தரை. மெல்லக் குனிந்த கைகேயியின் கரத்தில் எதையோ கொடுக்கிறாள். பெற்றுக் கொண்ட கைகேயிக்கு என்னவோ புரிகிறது.

மந்தரை கொடுத்த கண்ணாடியை இராமனுக்கு முன்னர் நீட்டுகிறாள். நிலவு முழுமையும் கண்ணாடியில் பிரதிபலிக்க, கதறிய குழந்தை கைகொட்டிச் சிரிக்கிறான். மகிழ்ச்சியில் கூத்தாடும் அந்தக் குழந்தையைத் தூக்குவதற்காக மந்தரை கையை நீட்டும்போது, மற்றவர்கள் தடுத்துவிடுகிறார்கள். முகம் கோண, முதுகு கோணியவள் திரும்புகிறாள்.

வேட்டையாடப் போன இடத்தில், காட்டில், பெற்றோரின் சுவடே தெரியாமல் கிடந்த சதைப் பிண்டத்தைக் கண்ணுற்ற கேகய மகாராஜா, குழந்தையைத் தூக்கித் துடைத்து இல்லம் கொணர்ந்தார். எல்லோரும் அருவருத்து ஒதுக்கினாலும், அரசரும் அரசியும் ஒதுக்கவில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in