மன அமைதி அருளும் தேவிகாபுரம் கனககிரீசுவரர் | பரிகார ஸ்தலங்கள்

மன அமைதி அருளும் தேவிகாபுரம் கனககிரீசுவரர் | பரிகார ஸ்தலங்கள்
Updated on: 
2 min read

திருவண்ணாமலை - ஆரணி செல்லும் பாதையில் 50 கிமீ தொலைவில் உள்ள தேவிகாபுரம் பெரியநாயகி சமேத கனககிரீசுவரர் கோயில் மன அமைதி அருளும் தலமாகப் போற்றப்படுகிறது. திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் பெற இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ஒரு சமயம் அம்மையும் அப்பனும் கயிலையில் வீற்றிருக்கும்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் சக்தியை நீக்கி சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். அதுகண்டு வருத்தமடைந்த அன்னை இறைவனை நோக்கி வணங்கி, “அய்யனே தங்களுடலில் சரி பாதியை எனக்கு வழங்கியருள வேண்டும்” என்று வேண்டினாள்.

இறைவனும் சக்தியை நோக்கி, “நீ பூவுலகம் சென்று கச்சியம்பதியில் (காஞ்சிபுரம்) காமாட்சி என்ற பெயருடன் தவமிருந்து என்னை பூஜித்து வா. உரிய காலத்தில் உன்னை மணந்து கொள்வேன். பின்னர் திருவருணைக்கு (திருவண்ணாமலை) வந்து வழிபாடு செய்யும்போது உமக்கு இடப்பாகம் தருவேன்” என்று உறுதியளித்தார்.

Loading content, please wait...

X