குடும்பத்தில் அமைதி அருளும் பெரம்பலூர் மதனகோபால சுவாமி | பரிகார ஸ்தலங்கள்

குடும்பத்தில் அமைதி அருளும் பெரம்பலூர் மதனகோபால சுவாமி | பரிகார ஸ்தலங்கள்
Updated on: 
2 min read

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயில், குடும்பத்தில் அமைதி அருளும் தலமாகப் போற்றப்படுகிறது. திருமணத் தடை விலக, குடும்பத்தில் ஒற்றுமை நிலவ இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தல வரலாறு:

துர்வாசரின் சீடராக இருந்த ஒரு முனிவர், ஒருசமயம் கவனக் குறைவால் தம் குருநாதரின் கமண்டலத்தில் இருந்த நீரைத் தட்டிவிட்டார். அதனால் கோபமடைந்த துர்வாசர் அவரைப் புலியாக மாறும்படி சபித்தார்.

பதறிப்போன சீடர், தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அதற்கு துர்வாசர், “சாபத்தை மாற்ற முடியாது. ஆனால் விமோசனம் சொல்கிறேன். புலியாக நீ உலாவும் பகுதிக்கு பஞ்ச பாண்டவர்கள் வருவார்கள்.

அப்போது பீமனின் கதையால் நீ அடிபடுவாய். அந்த சமயத்தில் சாபம் விலகும்” என்றார். துர்வாசர் சாபம் பலித்து சீடர் புலியாகித் திரிந்தார். பூர்வ ஜென்ம வாசத்தால், அக்காட்டிலிருந்த பெருமாளைத் துதித்தார். அதே காட்டில் பாண்டவர்கள் வனவாசம் செய்தார்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in