கல்விச் செல்வம் அருளும் கந்தாஸ்ரம முருகன் | பரிகார ஸ்தலங்கள்

கல்விச் செல்வம் அருளும் கந்தாஸ்ரம முருகன் | பரிகார ஸ்தலங்கள்
Updated on
1 min read

மூலவர் : ஞானஸ்கந்தர், குருநாதர்.

அம்பாள் : ஸ்கந்தமாதா, பராசக்தி.

ஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளின் கனவில் வந்த முருகப் பெருமான் தன்னை குறிப்பிட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்துவழிபாடு செய்யும்படி அருளினார். கனவில் வந்த முருகப் பெருமான் சொன்ன இடத்தைதேடி அலைந்த அவர் கடைசியாக இப்போது கந்தாஸ்ரமம் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் தான் கனவில் கண்ட இடம் இதுதான் என்று கூறி இங்கு முருகனை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். 1965-ம் ஆண்டு கந்தாஸ்ரமம் நிறுவப்பட்டது.

கோயில் சிறப்பு: முருகனும் அம்மையும் எதிரெதிர்சந்நிதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது.அம்பாள் உயிராகவும், முருகன் அறிவாகவும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த சந்நிதிகளை வணங்குவதால் உயிருக்கும், அறிவுக்கும் பலம் உண்டாகிறது. அதனின் பயனாக உயிரான அம்மை சாந்தத்தையும், அறிவான முருகன் ஆனந்தத்தையும் அளிக்கிறார்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in