

பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரும் குரு, சிஷ்யர் என்கிற நிலையில் மிகவும் நெருக்கமாகவும், பரஸ்பர பேரன்பு கொண்டவர்களாவும் திகழ்ந்தனர்.
அதுபோன்று வேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள் ஆகியவற்றில் தேர்ந்தவராகவும், ஒரு நடமாடும் கோயிலாகவும் திகழ்ந்த ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் காட்டிய அறவழியில், அருள்நெறியுடன் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் 35-வது பீடாதிபதியாக அருள் ஆட்சி புரிந்து வரும் ஸ்ரீபாரதி தீர்த்த மகாசந்நிதானமும் அவருடைய சிஷ்யரான ஸ்ரீ விதுசேகர பாரதி சந்நிதானமும் இருந்து வருகிறார்கள்.
இருவரும் குரு - சிஷ்ய உறவுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள். மதுரகவியாழ்வார் போன்றே தனது குருநாதரிடம் மிகுந்த பக்தியும், மரியாதையும் உடையவர்தான் ஸ்ரீ விதுசேகர பாரதி சந்நிதானம்.