

திருமாலின் மங்களா சாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் நாதன்கோவில் ஜெகந்நாதர் கோயில் 21-வது திவ்ய தேசம் ஆகும். சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் மூலஸ்தான கோபுரத்தில் நந்தியும், பிரம்மதேவரும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.
மூலவர்: ஜெகநாதன், நாதநாதன். விண்ணகரப்பெருமாள்,
தாயார்: செண்பகவல்லி
திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க மகாலட்சுமிக்கு விருப்பம் இருந்தது. ஆகவே செண்பகாரண்யம் என்ற தலத்துக்கு வந்து தவம் செய்தாள்.
திருமகளின் பிரிவை தாங்காத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக் கொண்டார். எனவே ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.