கருணையின் ஒளி

கருணையின் ஒளி
Updated on
2 min read

“எவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து, அவர் அவர்களைப் பொறுமையுடன் வளர்த்து, தமக்குக் கிடைத்த வசதிக்கேற்ப உணவளித்து, உடையளித்து, நன்றாகப் பராமரிக்கிறாரோ, அந்தப் பெண் குழந்தைகள் மறுமை நாளில் அவருக்கு நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் திரையாக இருப்பார்கள்” என்பது நபிமொழி.

ஒரு சமூகத்தின் நாகரிகத்தை அளவிட வேண்டுமானால், அது பெண்களையும் பெண் குழந்தைகளையும் எவ்வாறு மதிக்கிறது என்பதைப் பார்த்தாலே போதும். இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதகுலத்துக்கு எடுத்துரைத்த மார்க்கம் இஸ்லாம்.

பெண் குழந்தை பிறப்பதை அவமானமாகக் கருதிய அறியாமைச் சமூகத்தில், அவர்களை அல்லாஹ்வின் அருட்கொடையாக அறிவித்து, அன்புடனும் பொறுப்புடனும் வளர்ப்பது மறுமை வெற்றிக்கான வழி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்தார்கள்.

இந்த உயர்ந்த சிந்தனையை மனதில் பதிய வைக்கும் ஒரு நெகிழ்ச்சியான நீதிக்கதை அரபு இலக்கியத்தில் கூறப்படுகிறது. ஒரு மனிதனுக்கு தொடர்ந்து 9 ஆண் குழந்தைகள் பிறந்தனர். பத்தாவது குழந்தையாக ஒரு பெண் பிறந்தாள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in