இடைக்காட்டுச் சித்தர்

இடைக்காட்டுச் சித்தர்
Updated on: 
1 min read

இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்ற ஊரில் இடையர் குடியில் பிறந்ததால் இடைக்காட்டுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இவர் கொங்கணர் என்ற சித்தரின் சீடர் எனவும், கி.பி. 10-15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் அறியப்படுகிறது.

இடைக்காடர், வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள், தத்துவ நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய ‘ஞான சூத்திரம் 70’ என்ற நூல் சிறப்புடையது. கோனார் என்றழைக்கப்படும் இடையர் குலத்தில் பிறந்தவராததால், ஆடு மாடுகளை முன்னிறுத்தி தம் பாடல்களில் ‘கோனாரே’ என்று விளித்து பாடியுள்ளார்.

ஈசனின் மகத்துவத்தை தனது ‘தாண்டவராயக் கோனார் கூற்று’ என்ற பகுதியில் முதல் பத்து பாடல்களில் பாடியுள்ளார். ‘நாராயணக் கோனார் கூற்று’ என்ற பகுதியில் பதினொன்று முதல் பதினான்கு வரையிலுள்ள பாடல்களில் அனைத்து தத்துவங்களையும் சொல்லியுள்ளார். இந்தப் பகுதியின் ஒன்று முதல் பதினான்கு வரையிலான பாடல்களில் இறையருள் பெற்று வீடுபேறு அடையும் வழிகளை பாடியுள்ளார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in