

தாரகன் என்ற அசுரன், சிவனுடைய சக்தியால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான். இதன் காரணமாக தேவர்களைத் துன்புறுத்தினான். வருத்தமடைந்த தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். அவர்களிடம் ‘கவலை வேண்டாம்’ என சிவன் சொன்னாலும், அசுரனை அழிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
ஏனெனில் சிவன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். எனவே அவரை மன்மதன் மூலம் எழுப்பும் முயற்சியை தேவர்கள் மேற்கொண்டனர். இந்த முயற்சியில் மன்மதன் இறந்தானே தவிர பலன் கிடைக்கவில்லை. எனவே தேவர்கள், சிவனைப் பல நாமங்களைச் சொல்லி துதித்தனர்.
இதையடுத்து சிவனின் கருணைப் பார்வை கிடைத்தது. அவர் தன் நெற்றிக்கண்ணில் இருந்து சுடரை வெளிப்படுத்தி அதை அக்னியிடம் கொடுத்தார். அக்னியின் வயிற்றை அந்த நெருப்பு. தாக்கியது.