

திருவண்ணாமலையிலிருந்து 37 கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 50 கிமீ தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 55 கிமீ தொலைவிலும் உள்ள போளூர் சம்பத் கிரி லட்சுமி நரசிம்மர் கோயில், அனைத்திலும் வெற்றி அருளும் திருத்தலமாக போற்றப்படுகிறது.
செல்வத்தின் மலை என்று சம்பத் கிரி அழைக்கப்படுகிறது. சம்ஸ்கிருதத்தில் ‘சம்பத்’ என்றால் செல்வம். தமிழில் பொருளூர் என்றழைக்கப்பட்ட ஊர், காலப்போக்கில் போளூர் என்று ஆனது.
ஒருசமயம் குலஸ்தியர் - புலஸ்தியர் முனிவர்கள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை நோக்கிதவம் செய்ய சம்பத் கிரியை அடைந்தனர். தவத்தில் மகிழ்ந்த இறைவன், அவர்களுக்கு மாங்கனி அளித்தார்.