மாபெரும் விடுதலைப் பயணம்

மாபெரும் விடுதலைப் பயணம்
Updated on
2 min read

எகிப்துக்குச் சென்ற இஸ்ரவேல் மக்கள் பல்கிப் பெருகினர். இதனால் கலவரமடைந்த எகிப்தியர் அவர்களைக் கடும் வேலைகளுக்கு உட்படுத்தித் துன்புறுத்தினர். பார்வோன் மன்னனோ, பிறக்கும் இஸ்ரவேல் ஆண் குழந்தைகளைக் கொன்றுவிடக் கட்டளை இட்டார்.

லேவி குலப் பெண் ஒருத்தி கருவுற்று ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். 3 மாதங்களுக்குமேல் குழந்தையை மறைத்து வைக்க முடியாததால், கோரைப் புல்லால் பேழை செய்து, குழந்தையை அதனுள் வைத்து, நைல் ஆற்றின் கரையில் உள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவிட்டாள். குழந்தையின் சகோதரி தொலைவில் நின்று பார்த்துக்கொணடிருந்தாள்.

நைல் ஆற்றில் நீராட வந்த பார்வோனின் மகள், பேழையில் அழுதுகொண்டிருந்த குழந்தையைக் கண்டு இரக்கம் கொண்டவளாக, “இது எபிரேயக் குழந்தை” என்றாள்.

உடனே குழந்தையின் சகோதரி, “இந்தக் குழந்தையை வளர்க்க எபிரேய செவிலியைக் கூட்டிக்கொண்டு வரட்டுமா?” என்று கேட்டு, குழந்தையின் தாயையே கூட்டி வந்தாள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in