பாவ மன்னிப்பு

பாவ மன்னிப்பு
Updated on: 
2 min read

மனித உணர்வுகளை நன்கறிந்த வல்ல ரஹ்மான் தவறு இழைக்கும் மனிதர்களை உடனே தண்டிக்காது பாவ மீட்சி பெறுவதற்கான அவகாசத்தை அளிக்கிறான். மனிதர்கள் மீது கொண்ட கருணை காரணமாக பாவிகளை அழைத்து, “எனது அடியார்களே நீங்கள் இரவு பகலாக தவறிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பவனாக இருக்கிறேன். எனவே என்னிடத்தில் பாவ மன்னிப்பு கேளுங்கள். நான் உங்களை மன்னிக்கிறேன்” என்கிறான். இறைவனின் மகிழ்ச்சி: உங்களில் ஒருவர் வனாந்தரத்தில் தனது ஒட்டகத்தை தவற விட்ட பிறகு திடீரென அது கிடைக்கப்பெற்ற நிலையில் அவர் அடையும் மகிழ்ச்சியை விட அதிகமாக அல்லாஹ் தனது அடியான் பாவமன்னிப்பு தேடும்போது மகிழ்ச்சி அடைகிறான் என நபிகள் நாயகம் கூறினார்கள். (நூல்: புகாரி முஸ்லிம் )

பாவ மன்னிப்பு கேட்பதால் ஏற்படும் நன்மைகள்:

1.தீமைகளில் இருந்து விடுபட்டு இறை அன்பை பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது. நிச்சயமாக பாவங்களை உணர்ந்து மீளுகிறவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்- (அல்குர்ஆன் 2:222)

2.இறை தண்டனை தடுக்கப்படுகிறது. அவர்கள் பாவமன்னிப்பு கோரிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை. (அல்குர்ஆன் 8 : 33)

3.செல்வமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கிறது. மழை பொழிந்து தோட்டங்கள் செழிப்படைந்து பூமி பசுமை ஆகிறது. உங்கள் இரட்சகனிடம் மன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான் (அவ்வாறு செய்வீர்களாயீன் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in