வியாபார விருத்தி அருளும் எய்யலூர் சொர்ணபுரீஸ்வரர்

Updated on: 
1 min read

எய்யலூரில் அருள்பாலிக்கும் மங்களாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் வியாபார விருத்தி அருள்பவராகப் போற்றப்படுகிறார். ஸ்ரீராமர், லட்சுமணர், சீதா தேவி மூவரும் காட்டில் பர்ணசாலை அமைத்து தங்கியிருந்த சமயம், அசுரன் ராவணன் சீதையை வஞ்சகமாகக் கடத்திச் சென்றான். மனைவியைப் பிரிந்த ஸ்ரீராமர், சீதா பிராட்டியைத் தேடி அலைந்தார். அப்படி தெற்கு நோக்கி வரும்போது, ஈச்ச மரக்காடான ஈச்சம்பூண்டியைக் கடந்து சிறுகாட்டூர் தலத்தை அடைந்தனர்.

அங்குள்ள மக்கள், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், வெள்ள அபாயம் நீங்கும் வரை அவ்வூரில் தங்கும்படியும் ஸ்ரீராம, லட்சுமணரை வேண்டினர். அவர்கள் ஆற்றங்கரையில் இருந்த சிவலிங்கத்தின் மேல் பகுதி வரை வெள்ள நீர் செல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடும் நிலை உண்டானது. வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், தண்ணீர் வற்றினால்தான் தங்கள் பயணம் தடையின்றி தொடரும் என்பதாலும் ஸ்ரீராமபிரான் தனது வில்லை எடுத்து அம்பைத் தொடுத்தார். அதுகண்டு நடுங்கிய கொள்ளிடம் ஆற்றின் வெள்ளம் கட்டுப்பட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in