மனநிம்மதி அருளும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் | பரிகார ஸ்தலங்கள்

மனநிம்மதி அருளும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் | பரிகார ஸ்தலங்கள்
Updated on
2 min read

முலவர்: தான்தோன்றீஸ்வரர்.

இறைவி: தர்மசம்வர்த்தினி.

பல வருடங்களுக்கு முன்பு பேளூர் பகுதியில், மிளகு வியாபாரம் செய்து கொண்டிருந்த மாணிக்கம் செட்டியார், அவரது மிளகு வியாபாரத்துக்காக தினமும் மிளகு மூட்டைகளை மாட்டுவண்டியில் ஏற்றிச் சென்று சந்தையில் விற்று வருவார். ஒரு நாள் கலைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓய்வு எடுத்தார்.

அப்போது சமையல் செய்ய சுண்டைக்காய்களை ஒரு கல்லில் நறுக்கும்போது ஒரு குரலானது அவருக்கு கேட்டது. ‘எனக்கு கல்லடிபட்டு தலை வலிக்கிறது, உன் மிளகை அரைத்து பற்றுபோடு’ என்றபடி குரல் ஒலித்தது.

மனிதர்களே இல்லாத இடத்தில் குரல் மட்டும் வருவதை கேட்ட வியாபாரி, பயத்தில் ‘என்னிடம் மிளகு இல்லை உளுந்து தான் இருக்கிறது’ என்று கூறி விட்டு ஊருக்கு திரும்பி விட்டார். வீட்டுக்கு வந்ததும் மிளகு மூட்டைகளை திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். மிளகு முழுவதும் உளுந்தாக மாறி இருந்தது.

மீண்டும் அந்தக்குரல் ஒலித்த இடத்துக்கே அந்த வியாபாரி சென்று இறைவனை வேண்டினார். அப்பொழுது மறுபடியும் அந்தக்குரல் ஒலித்தது. ‘நீ சுண்டைக்காய் நறுக்கிய இடத்திலிருந்து மண்ணை எடுத்து உளுந்தின் மீதுதூவு’ என்று கூறியது அந்தக்குரல்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in