கடன் பிரச்சினை தீர்க்கும் அந்திலி நரசிம்மர் | பரிகார ஸ்தலங்கள்

கடன் பிரச்சினை தீர்க்கும் அந்திலி நரசிம்மர் | பரிகார ஸ்தலங்கள்
Updated on
2 min read

விழுப்புரம் மாவட்டம் அந்திலி நரசிம்மர் கோயில், கடன் பிரச்சினை தீர்க்கும் தலமாக போற்றப்படுகிறது. எதிரிகளின் தொல்லை நீங்க, திருமணத் தடை விலக, குழந்தை பாக்கியம் கிட்ட, கண் நோய், மன நோய் விலக இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

தல வரலாறு: குழந்தை பிரகலாதனுக்கு அவனது தந்தையால் ஆபத்து என்பதை அறிந்த நாராயணன், அவனை காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்தார். நாராயணன் எங்கு சென்றாலும் கருடனின் மீது ஏறி செல்வார். ஆனால் பிரகலாதனை உடனே காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில் தூணில் தோன்றினார்.

இதனால் பரமபதத்தில் இருந்த கருடனுக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது. தன் மீது நாராயணனுக்கு ஏதேனும் கோபம் உள்ளதா என்று புரியாமல் குழம்பினார். வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு வந்தார். பூமியில் நிம்மதியின்றி தவித்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in