முதல் படிதான் கடைசி படி

முதல் படிதான் கடைசி படி
Updated on
1 min read

ஷங்கர்

ஜே. கிருஷ்ணமூர்த்தி 125

மதங்கள், சடங்குகள், நியமங்கள், நிறுவன வரம்புகளுக்குள் அடைபட மறுத்து, தன்னை குருவாக எவரும் பின்பற்று வதையும் மறுத்தவர் ஜே. கிருஷ்ண மூர்த்தி; மனிதனை முழுமையாக எந்த நிபந்தனைகளுமற்று விடுதலை செய்வதற்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் பயணித்து பல்வேறு தரப்பட்ட மக்களிடம் உரையாடியவர்.

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிய பிரம்ம ஞானசபையைச் சேர்ந்த அன்னி பெசண்ட் மற்றும் சார்லஸ் லெட்பீட்டர் ஆகியோரால் ‘லோக குரு’ ஆக இளம்வயதிலேயே அடையாளம் காணப்பட்டவர் ஜே. கிருஷ்ணமூர்த்தி.

மனிதன் அகத்தில் மேற்கொள்ள வேண்டிய சுதந்திரமே அவசியம் என்பதை வலியுறுத்தி உண்மைக்கான பயணம் என்பது பாதைகளற்றது என்பதை உணர்ந்தார். அந்தப் பதவியையும் உதறினார். அகவிடுதலையே மனிதனையும் அவன் சேர்ந்து உருவாக்கும் சமூகத்தையும் துயரங்களி லிருந்து விடுவிக்கும் என்பதே அவரது போதனையின் மையம்.

குழந்தைகள், மாணவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவவாதிகளுடன் அவர் உலகெங்கும் பயணித்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உரையாடலில் இருந்தார்.

நவீனத் தொழில்நுட்பமும் சேர்ந்து பேதங்களையும் துயரங்களையும் சந்தேகங்களையும் அதிகரித்திருக்கும் உலகில் அவரது போதனைகள் ஒரு நண்பனின் அந்தரங்கத்தையும் ஆசிரியனின் கனிவையும் கொண்டவை.

ஜே. கிருஷ்ணமூர்த்தி பிறந்து 125 ஆண்டுகள் ஆகின்றன. அவரது வாழ்வையும் அவரது போதனைகள், செயல்பாடுகளை நினைவூட்டும் வண்ணம் சென்னை வசந்த் விஹாரில் கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் இந்தியா, ‘தி பர்ஸ்ட் ஸ்டெப் இஸ் தி லாஸ்ட் ஸ்டெப்’ என்ற கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.

அவரது ஒளிப்படங்கள், அவரது உரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிகள், அவரது ஆடியோ உரைகள் அனைத்தும் வசந்த விஹார் கட்டிடம் அமைந்திருக்கும் இயற்கைச் சூழலோடு இயைந்து கண்காட்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து சில துளிகள்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in