தீர்த்தங்கரர்கள் கோயில்கள் தலவிருட்சங்கள்

தீர்த்தங்கரர்கள் கோயில்கள் தலவிருட்சங்கள்
Updated on
1 min read

24 தீர்த்தங்கரர்கள் பற்றிய குறிப்புகளுடன் அவர் ஞானம் பெற்ற விருட்சங்கள் இந்த நூலின் முதல்பகுதியாக இடம்பெற்றுள்ளன. அத்துடன் சைவத் திருத்தலங்களின் தல விருட்சங்கள், அவற்றின் அறிவியல் பெயர், மருத்துவ பலன்கள், இயல்புகள் பற்றி ஒளிப்படங்களுடன் விளக்குவதாக இரண்டாவது பகுதி உள்ளது.

கடம்பவநேசர், மருதவநேசர், ஆலங்காட்டீசர், முல்லைவனநாதர், பனங்காட்டீசர், புன்னைவனநாதர், குறும்பலாநாதர், வில்வனேஸ்வரர் போன்ற இறைவனின் திருநாமங்கள் தலவிருட்சங்களைக் கொண்டே அழைக்கப்படும் மரபு நம்முடையது.

தலவிருட்சங்களின் அத்தனை விவரங்களும் பூ, இலை, காய் ஆகியவற்றைத் தனித்தனியாக அடையாளம் காணும் வகையில் இந்த நூலில் விவரங்கள் தரப்பட்டுள்ளன. இயற்கையும் அறிவியலும் ஆன்மிகமும் இணையும் சங்கமமாக இந்த நூல் திகழ்கிறது.

மனவளம் காக்கும் தீர்த்தங்கரரும் மண்வளம் காக்கும் விருட்சங்களும்

பூ. இரத்தினசபாபதி,
ஜெயின்ஸ் இந்தியா அறக்கட்டளை
விலை : ரூ. 250,
தொடர்புக்கு : 044 4293 3300

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in