

கிருஷ்ண பரமாத்மா, கர்ணனின் குணம் அறிந்து நெகிழ்ந்த தருணங்கள் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கர்ணன் அடிபட்டு உயிரிழக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மமே அவனைக் காத்தருளியது. அந்த தர்மத்தையும் கண்ணன் பெற்றுக் கொண்டுவிட்டார். மனம் பொறுக்காமல், கண்ணன் கர்ணனுக்கு வரம் அளிப்பதாக உறுதியளிக்கிறார்.
அப்போது கர்ணன், “எனக்கு மறுபிறவி வேண்டாம். அப்படி மீண்டும் பிறக்க நேர்ந்தால் யாருக்கும் இல்லை என்று சொல்லாமல், கொடுக்கும் உள்ளத்தை எனக்குத் தர வேண்டும்” என்று கண்ணனிடம் வேண்டினார். கண்ண னின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்படி ஒரு நல்லவனா என்று நினைத்தார். கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டார்.