

இறைவன் ஒருவனே. அவனே வணங்க தகுதியானவன் என்ற ஓர் இறை கொள்கையை மக்களிடம் எடுத்து கூறிய முஹம்மது, தனி மனித ஒழுக்கத்துக்கு இறை வணக்கம் என்ற தொழுகையை கடைபிடிக்க வலியுறுத்தினார். 1,450 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஏழைத் தாய்க்கு ஒரு மகன் பிறந்தார்.
முஹம்மது என்று பெயரிடப்பட்டார். தாயின் கருவறையில் இருக்கும்போது தந்தையை இழந்தார். ஆறு வயதில் தாயையும் இழந்தார். பின்பு பெரிய தந்தையின் அரவணைப்பில் வாழ்ந்தார். கல்வி கற்கும் சூழல் இன்றி இவருடைய பெரிய தந்தை ஆடுகளை மேய்க்கும் பணியை ஒப்படைத்தார். எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை சிறப்பாகச் செய்யக்கூடிய சிறந்த பண்பாளராக இருந்தார்.