

இந்து, இஸ்லாமிய மதங்களில் இம்மை, மறுமை குறித்த நம்பிக்கை உண்டு. இம்மை என்பது இப்பிறவியையும், மறுமை என்பது இறப்புக்குப்பின் வரும் மறுபிறவியையும் குறிக்கும். இம்மையில் செய்யும் செயல்களின் விளைவாக, மறுமையில் நல்லது அல்லது தீய பலன்களை அனுபவிப்போம் என்று கூறப்படுகிறது. இஸ்லாமிய நம்பிக்கையில் மறுமை என்பது இறுதித் தீர்ப்பு நாளாக கருதப்படுகிறது.
காசிம், பாக்தாத் நகரத்தில் சிறந்த வணிகர். காசிம் - ஆமினா தம்பதிக்கு அபூபக்கர் என்ற மகன் இருந்தார். இக்குடும்பத்தின் வாழ்வு நல்லவிதமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆமினாவுக்கு கணவர் மேல் சந்தேகம் ஏற்பட்டது. அடிக்கடி வேறு தெருவுக்கு சென்று வருவதை ஆமினா அறிந்தார். தனது பணிப்பெண் ஜுனைதாவிடம் கணவரை கவனிக்குமாறு கூறினார்.