

ஒருமுறை ஆன்மிக குரு ஒருவர் தமது 2 சீடர்களை அழைத்து, "உங்கள் இருவருக்கும் தலா பத்தாயிரம் பொற்காசுகள் தருகிறேன். அதனைக் கொண்டு நீங்கள் இந்த அறையை நிரப்ப வேண்டும்” என்று கட்டளையிட்டார். உடனே, சீடர்கள் இருவரும் தங்களது குருவின் கட்டளையை செயல்படுத்தத் தொடங்கினர்.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் திரும்பிய முதல் சீடன் குருவிடம், "குருவே, எவ்வளவு பொருட்கள் வாங்கி நிரப்பினாலும் என்னால் இந்த அறையை நிரப்பவே முடியவில்லை. எனவே, எனக்கு மேலும் கொஞ்சம் பொற்காசுகள் தாருங்கள்" என்று வேண்டினான். குருவும் அவ்வாறே வழங்கினார். மீண்டும் மீண்டும் திரும்பிவந்த சீடன் அறையை நிரப்ப முடியவில்லை என்று கூறி, மேன்மேலும் பொற்காசுகளை வாங்கி, ஓடியாடி பொருட்களைச் சேகரித்து அறையை நிரப்ப முயன்றான்.