உலகம் புகழும் கலை நாயகன் முருகன்
முருகப் பெருமானின் ஆறு உறைவிடங்களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியன அறுபடை வீடுகளாக போற்றப்படுகின்றன. தமிழ்ச் சங்க இலக்கியங்கள், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, அருணகிரிநாதரின் திருப்புகழ் ஆகியவற்றில் அறுபடை வீடுகள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
‘தி இந்து’ குழும பதிப்பகம் சார்பில் ‘முருகனின் மகிமை போற்றும் அறுபடைவீடு’ (The Glory of Murugan and His Arupadai Veedu) என்ற தலைப்பில் ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல் வெளியீட்டு விழா அண்மையில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் நடைபெற்றது. சுவாமிநாத சுவாமியின் திருவடியில் இந்த புத்தகங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ‘தி இந்து’ குழும இயக்குநர் ரோஹித் ரமேஷ், தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்பு நூல்களை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் ‘தி இந்து’ குழும துணைத் தலைவர் (விற்பனை மற்றும் விநியோகம்) தர் அரனாலா, இதழ்கள் மற்றும் சிறப்பு வெளியீடுகள் பிரிவு தலைவர் ஆர்.சீனிவாசன், முதுநிலை பொது மேலாளர் பாபு விஜய், திருச்சி பதிப்பு மேலாளர் கே.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நூலின் சிறப்பு அம்சங்கள்: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளின் தனித்துவம், வரலாறு மற்றும் அனைத்து சிறப்பு அம்சங்களையும் இந்நூல்கள் விவரிக்கின்றன. பிரபல ஆன்மிக எழுத்தாளர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். தமிழ் கலாச்சாரத்தில் இருந்து பிரிக்க முடியாதவராக முருகப் பெருமான் உள்ளார் என்றும், இதன் காரணமாகவே முருகப் பெருமான் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகிறார் என்றும் கூறி, அவரது பெருமைகளை முதல் அத்தியாயம் விளக்குகிறது.
இரண்டாம் அத்தியாயத்தின் மூலம் அறுபடை வீடுகளின் தனித்துவத்தை அறியலாம். இதில் முருகப் பெருமான் ஓய்வெடுத்து தியானம் செய்த இடமான திருப்பரங்குன்றத்தின் அருமை, பெருமைகள், திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு நடவடிக்கை, குடமுழுக்கு வைபவம், திருச்சீரல்வாயின் தனித்துவம், பாறை நிலப்பரப்பில் உள்ள கோயில்கள், உன்னத துறவின் உருவகம், நால்வர் கோயில்கள், பக்தியின் வெளிப்பாடு, பழநி பஞ்சாமிர்தத்தின் மகிமை, பிரணவத்தின் முக்கியத்துவம், தந்தையும் மகனும் சுவாமிமலையில் ஒன்றே என்ற தத்துவம், உத்தர சுவாமிமலை கோயிலின் (டெல்லி மலை மந்திர்) சிறப்பு அம்சங்கள் விவரிக்கப்படுகின்றன.
அமைதியின் உறைவிடம் திருத்தணி என்பதும், இத்தலம் வாக்கேயக்காரர் முத்துசுவாமி தீட்சிதர் புலமை பெற்ற தலம் என்பதும் விரிவான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒற்றுமையை வலியுறுத்தும் தலம் பழமுதிர்ச்சோலை என்பதையும் இந்த அத்தியாயத்தின் மூலம் அறியலாம். அடுத்து வரும் அத்தியாயங்கள் வேலின் சிறப்புகள், முருகப் பெருமானின் திருக்கோலங்கள், காவடி தத்துவம், சைவக் குரவர் திருஞானசம்பந்தரின் தொண்டுகள், முருகப் பெருமானைப் போற்றும் இலக்கியப் படைப்புகள், கலை வடிவ நாயகனாகத் திகழும் முருகப் பெருமானின் எழிற்கோலம் ஆகியவற்றை விவரிக்கின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள மேலும் பல பிரசித்தி பெற்ற முருகன் கோயில்கள் குறித்த தகவல்களும், இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளது தனிச்சிறப்பு. இந்த நூலை ‘தி இந்து’வின் ஃப்ரைடே ரிவ்யூ பிரிவு முன்னாள் பொறுப்பாளர் கீதா வெங்கடரமணன் தொகுத்துள்ளார். முருகப் பெருமான் தொடர்பான தகவல்களை எஸ்.அண்ணாமலை அளித்துள்ளார்.
முருகப் பெருமானின் மகிமைகளை போற்றும்
நூல்களை பெற்று அனைத்திலும் வெற்றி பெறுவோம்..!
ஆன்லைனில் முன்பதிவு: அறுபடை வீடுகள் - நூலின் ஆங்கிலப் பதிப்பின் விலை ரூ.2,999 மற்றும் தமிழ் பதிப்பின் விலை ரூ.2,499. இந்த நூல்களை http://publications.thehindugroup.com/bookstore/ என்ற இணையதளத்துக்கு சென்று The Hindu Group Bookstore மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்து வாங்கலாம்.
