பண்ணையிலிருந்து நேரடியாக பயனாளிகளுக்குச் செல்லும் பாரம்பரிய அரிசி: இடைத்தரகர் இல்லாததால் அதிக லாபம்

இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முத்தமிழ்.

இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முத்தமிழ்.

Updated on
2 min read

புதுச்​சேரி வில்​லியனூர் ஆரியப்​பாளை​யத்​தைச் சேர்ந்​தவர் முத்​தமிழ் (38). கடந்த 15 ஆண்​டு​களாக விவ​சா​யத்​தில் ஈடு​பட்டு வரும் இவர், நம்​மாழ்​வாரின் உரைகளைக் கேட்​டு, 4 ஏக்​கர் நிலத்​தில் இயற்கை விவ​சா​யம் செய்து வரு​கிறார்.

இவரது பண்​ணை​யில் உற்​பத்தி ஆகும் பாரம்​பரிய அரிசி நேரடி​யாக பயனாளி​களுக்கே சென்று சேர்​கிறது. இடைத்​தரகர் இல்​லாத இந்த வர்த்​தகத்​தில் விவ​சாயி - பயனாளி ஆகிய இரு தரப்​புக்​குமே லாபம் கிடைக்​கிறது என்​கிறார் அவர்.

தன்​னுடைய விவ​சா​யம் பற்றி அவர் கூறிய​தாவது: நம்​மாழ்​வாரின் உரைகளைக் கேட்​டு, கடந்த 7 ஆண்​டு​களுக்கு முன்பு முழு​மை​யான இயற்கை விவ​சா​யத்​தில் ஈடு​பட்​டேன். இயற்கை விவ​சாய முறை​யில், பூச்​சித் தாக்​குதலை எதிர் கொள்ள முடி​யாது என்​றெல்​லாம் அச்​சமூட்​டினர்.

ஆனால், பாரம்​பரிய நெல் ரகங்​களை சாகுபடி செய்​யும்​போது பூச்​சித்​தாக்​குதல் அவ்​வள​வாக இருக்​காது என்​பதை எனது அனுபவத்​தில் தெரிந்​து​கொண்​டேன். இப்​போது, கருப்பு கவுனி, சீரக சம்​பா, தூய மல்​லி, சிவன் சம்​பா, குதிரை​வாலி, பூங்​கார், ரத்​த​சாலி, கருங்​குறு​வை, குள்​ளக்​கார் போன்ற பாரம்​பரிய நெல் ரகங்​களை மாற்​றி, மாற்றி சாகுபடி செய்து வரு​கிறேன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in