ஆடு வளர்க்​க​னு​மா...? - முதலில் முருங்கை மரம் வளருங்​க...

ஆடு வளர்க்​க​னு​மா...? - முதலில் முருங்கை மரம் வளருங்​க...
Updated on
2 min read

ஆடு வளர்ப்​பவர்​களுக்கு சவாலாக இருப்​பதே தீவனம்​தான். ஆடு​களுக்கு சத்​தான தீவனம் கிடைப்​ப​தோடு, விலை குறை​வாக​வும் இருக்க வேண்​டும். ஆனால், மேய்ச்​சல் நிலங்​கள் குறைந்​து​விட்ட சூழலில், அதி​கக் காசு கொடுத்து தீவனம் வாங்​காமல், ஆடு வளர்ப்பு சாத்​தி​யமில்லை என்ற நிலை ஏற்​பட்​டு​விட்​டது.

ஊர்​புறப் பகு​தி​களில், மேய்ச்​சலுக்கு உதவிய மேய்க்​கால் புறம்​போக்கு உள்​ளிட்ட பொது​நிலங்​கள் குறைந்​து​விட்​டன. இதனால் இயற்​கை​யான மேய்ச்​சலை இழந்​து, கால்​நடைகளை பட்​டிகளில் அடைத்​து​வைத்து வளர்க்​கும் முறை பெருகி வரு​கிறது. இந்த மாற்​றங்​களின் கூட்டு விளை​வாக, கால்​நடை வளர்ப்​பில் தீவனச் செலவு பெரிதும் உயர்ந்​துள்​ளது.

நிலங்​களி​லிருந்து கிடைத்து வந்த தீவனங்​களின் குறைவு மற்​றும் ஊட்​டச்​சத்து சமநிலை​யின்மை போன்ற காரணங்​களால் கால்​நடை வளர்ப்பு பாதிக்​கப்​படு​வதோடு, பால் மற்​றும் இறைச்சி உற்​பத்​தி​யிலும் பாதிப்​பு​கள் ஏற்​படு​கின்​றன. இதனால், சந்​தை​யில் விற்​கப்​படும் தீவனங்​களை அதிக விலை கொடுத்து வாங்க முடிந்​தவர்​களால் மட்​டுமே, கால்​நடைகளை வளர்க்க முடி​யும் என்ற நிலை ஏற்​பட்​டிருக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in